Enable Javscript for better performance
தபால் நிலையம் முற்றுகை:தபெதிகவினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவை தலைமைத் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 23 பேரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமைத் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு தலைமை வகித்த தபெதிகவின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் பேசியதாவது:
    தமிழகத்தில் மத்திய அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு வட மாநிலம், கேரளத்தைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், மற்ற மாநிலங்களில் அரசுப் பணியிடங்களுக்கு அந்த மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தபால்காரர் பணிக்கு வட்டார மொழி என்று சொல்லப்படும் மாநில மொழி எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியை மீறி ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 90 சதவீத மதிப்பெண் பெற்றதாகக் கூறி அவர்களைத் தேர்வு செய்துள்ளனர். அவ்வாறு மதிப்பெண் பெற்று தேர்வு செய்தவர்களால் தமிழ் பேசக் கூடத் தெரியவில்லை. ஆகவே, இந்தத் தேர்வில் மத்திய அரசு முறைகேடு செய்துள்ளதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்றார். இதையடுத்து, தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 3 பெண்கள் உள்பட 23 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai