Enable Javscript for better performance
தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    வருமான வரித் துறை விதித்த அபராதத்தை செலுத்த முடியாததால் மனமுடைந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    கோவை சிங்காநல்லூர் கே.பி.ஆர். லேஅவுட்டில் வசித்து வந்தவர் எஸ்.வேணுகோபால் (44). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். சூலூரை அடுத்த பட்டணம்புதூரில் 80 வீடுகள் கட்டி விற்பனை செய்தார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு, வருமான வரித் துறை அதிகாரிகள் வேணுகோபாலின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
    அதில், வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி வேணுகோபாலுக்கு ரூ. 5.75 கோடி அபராதம் விதித்தனர். அதில், ரூ. 3.40 கோடியை அவர் அபராதமாகச் செலுத்தியுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த வேணுகோபால் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
    இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, வேணுகோபால் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அபராதமாகச் செலுத்த வேண்டிய மீதித் தொகையான ரூ. 2.35 கோடியைச் செலுத்த இயலாததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai