Enable Javscript for better performance
பாரதியார் பல்கலை.யில் முதுநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பாரதியார் பல்கலை.யில் முதுநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 05th April 2017 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2017-18-ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
    பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் நடத்தப்பட்டு வரும் முதுநிலைப் பாடத் திட்டங்களான எம்.எஸ்சி., எம்.காம்., எம்.ஏ., எம்.சி.ஏ., எம்.எட். ஆகியவற்றில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கி மே 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    ‌w‌w‌w.b-​‌u.ac.‌i‌n​  என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்கள், தகவல் தொகுப்பேடு போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மாணவர் எண்ணிக்கை, கட்டணம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட விவரங்களையும் இணையதளத்திலேயே காண முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 (எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.150), இதரச் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட துறைத் தலைவரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்க வேண்டும்.
    இறுதியாண்டு, இறுதி பருவத் தேர்வு எழுதியுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை நேரிலும், தபால் மூலமாகவும் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும். எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பாடத் திட்டத்துக்கான மாணவர் சேர்க்கையானது கலந்தாய்வு மூலம் தனியாக நடைபெறும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai