Enable Javscript for better performance
மரக் கடையில் ரூ. 2 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் மரக்கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    கோவை, வடகோவை சிந்தாமணி அருகே பிளைவுட் கடை வைத்திருப்பவர் ராகேஷ் மேத்தா (47). இவர், கடந்த திங்கள்கிழமை இரவு வழக்கம்போல், கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai