Enable Javscript for better performance
மேட்டுப்பாளையம் அருகே எரிந்த நிலையில் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் அருகே குட்டையூர் வனப் பகுதியில் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் குட்டையூர் அருகே மாதேஸ்வரன் கோயில் பகுதியில் ஆட்டோ நகர் உள்ளது. இங்குள்ள காட்டுப் பகுதிக்கு ஆடுகளை மேய்க்க சிலர் செவ்வாய்க்கிழமை காலை சென்றனர். அப்போது, முழுவதும் எரிந்த நிலையில் சடலம் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காரமடை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி, துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) குணசேகரன் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து காரமடை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai