Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு ஆதரவாகஅரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு ஆதரவாக அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 05th April 2017 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கோவையில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் தமிழக விவசாயிகள் 20 நாள்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இவர்களுக்கு ஆதரவாக கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை முடக்கும் வகையில் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai