Enable Javscript for better performance
இருசக்கர வாகனத்துக்குதீ வைத்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவை அருகே இடையர்பாளையத்தில் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த நபரை துடியலூர் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
    இடையர்பாளையம், கோவில் மேடு அருகேயுள்ள நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் பவித்குமார் (24). தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வரும் இவர், தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள திலகர் வீதியில் வசித்துவரும் அடைக்கப்பன் (எ) ராஜா, பவித்குமார் வாகனத்துக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் வாகனம் எரிந்து சேதமானது. இதுகுறித்து பவித்குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்ததன் பேரில், அடைக்கப்பனைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai