Enable Javscript for better performance
காயங்களுடன்இளைஞர் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்டம், குரும்பபாளையம் அருகே காயங்களுடன் கிடந்த இளைஞர் சடலத்தை போலீஸார் மீட்னர்.
    குரும்பபாளையம் அருகே வழியாம்பாளையம், வையாபுரி நகர் பகுதியில் காயங்களுடன் இளைஞர் சடலம் கிடப்பதாக கோவில்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    உயிரிழந்தவரின் சட்டை பையில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை மூலமாக அவர், நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த புஷ்பா மகன் மைக்கேல் லிபர்டி (38) என்று தெரியவந்தது.  அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai