Enable Javscript for better performance
சுவாமி சிலையைத் தகர்க்க முயற்சி:4 இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையை அடுத்த குனியமுத்தூரில் கோயிலில் இருந்த அம்மன் சிலையைத் தகர்க்க முயன்றதாக 4 இளைஞர்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    குனியமுத்தூர் அருகே அறம் வளர்த்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குள் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு, நான்கு மர்ம நபர்கள் இரும்புக் கம்பிகளுடன் நுழைந்துள்ளனர்.கோயிலுக்குள் மர்ம நபர்கள் நுழைவதை அப்பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் பார்த்துள்ளார். அவர் சப்தம் போடவோ நான்கு பேரும் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
    இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகி பழனிசாமி (43) புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின்பேரில், அவர்கள் விட்டுச்சென்ற காரை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
    இதுதொடர்பாக, குனியமுத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த எஃப்.இப்ராஹீம் (33), மதுக்கரை மார்க்கெட் முஸ்லிம் காலனியைச் சேர்ந்த கே.முகமது நிசார் (27), பி.கே.புதூர் மதுரை வீரன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஏ.அபுதாஹீர் (33), இடையர்பாளையம் குமரன் கார்டனை சேர்ந்த ஏ.முகமது ரஃபீக் (31) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நான்கு பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai