Enable Javscript for better performance
சோமனூரில் பாவு நூல் கொண்டு சென்ற லாரி தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    சோமனூரில் பாவு நூல் கொண்டு சென்ற லாரி தடுத்து நிறுத்தம்

    By DIN  |   Published on : 06th April 2017 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூலூர் அருகே உள்ள சோமனூரில் பாவு நூல் கொண்டு சென்ற லாரியை விசைத்தறியாளர்கள் தடுத்து நிறுத்தினர்.
    கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், கடந்த 2-ஆம் தேதியிலிருந்து இதுவரை ரூ. 88 கோடிக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
    இந்நிலையில், சோமனூரில் இயங்கி வந்த தறிகளுக்கு பாவு நூல்களைக் கொண்டு சென்ற லாரிகளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. மேலும், சேடபாளையத்தில் தன்னாசி மகன் ஜமீன் என்பவருக்குச் சொந்தமான தறிகள் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சங்கத்தில் உறுப்பினராக
    இல்லை என கூறப்படுகிறது. ஆனால், அங்குசென்ற சிலர் அவரது தறிகளின் பாவு நூல்களை அறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஜமீன் புகார் அளித்தார்.
    இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai