Enable Javscript for better performance
கோவையில் ஆலங்கட்டி மழை- Dinamani

சுடச்சுட

    

    வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் கோவையின் சில இடங்களில் வியாழக்கிழமை இரவு ஆலங்கட்டி மழை பெய்தது.
    கோவையில் கடந்த சில ஆண்டுகளாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கும் முன்னதாக, பிப்ரவரி மாத இறுதி முதலே வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் அதிகபட்சமாக 100.7 டிகிரி வெயில் பதிவான நிலையில், இந்த ஆண்டு 102 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரித்துள்ளது.
    இதனால், கோடைக்காலம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமானதாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில்,  நகரின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்து, வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துள்ளது.
    இரவு 7.15 மணி அளவில் இடி, மின்னலுடன் கூடிய மழை தொடங்கி, சுமார் 15 நிமிடங்கள் வரை பெய்தது. கோவை காளப்பட்டி, விமான நிலையம், நேரு நகர், சரவணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்தது. இதேபோல், பீளமேடு, ராமநாதபுரம், ஆட்சியர் அலுவலகம், செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai