Enable Javscript for better performance
சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை என அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை என அறிவிப்பு

    By DIN  |   Published on : 07th April 2017 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூலூரை அடுத்த சோமனூரில் கோவை, திருப்பூர் மாவட்ட சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
    சோமனூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் கோவை, திருப்பூர் மாவட்ட சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் முருகசாமி தலைமை வகித்தார். பொருளாளர் காளியப்பன் முன்னிலை வகித்தார். இதில், செயலாளர் முருகசாமி பேசியதாவது:
    இச்சங்க உறுப்பினர்களிடம் 40,000 விசைத்தறிகள் உள்ளன. இதன் மூலம் 20,000-த்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். சொந்தப் பணத்தை முதலீடு செய்து, சொந்தத் தறிகளில் ஜவுளி உற்பத்தி செய்து வருகிறோம். ஜூன் மாதம் வரை மட்டுமே வட மாநிலச் சந்தைகளில் ஜவுளிகளுக்கு தேவை இருக்கும். ஆகவே, தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் முதலீட்டை இழக்கும் நிலை ஏற்படலாம். வங்கிகளில் கடன் பெற்றோர் அதற்கு உண்டான வட்டி, அசல் கட்டுவதில் சிக்கல் ஏற்படும். ஆகவே, தற்போது கூலிக்கு நெசவு செய்யும் சோமனூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்துவரும் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற முடியாது. எனவே, எங்களது தறிக் கிடங்குகளுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai