Enable Javscript for better performance
தனியார் நிறுவனத்தின் நிலத்தை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நிறுவனத்தின் நிலத்தை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 07th April 2017 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை ஏலம் விட கோவை டான்பிட் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
    ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி அழகேசன் (62). இவரது மகன்கள் சதீஷ் (29), சசிகுமார் (32), சுரேஷ்பாண்டி (32) ஆகியோருக்குச் சொந்தமாக சென்னிமலையில் பார்ம்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
    இந்நிறுவனத்தின் மூலம் நாட்டுக் கோழி, ஆடு, பசு வளர்ப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி 107 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 39 லட்சம் வரையில் முதலீடு பெற்றுள்ளனர்.
    பின்னர், பணத்தை திரும்பித் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டதாக தந்தை, மகன்களை போலீஸார் கைது செய்தனர்.
    மேலும், சென்னிமலையில் இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்த ரூ. 3.06 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் நிலத்தை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் முடக்கினர். இந்த நிலத்தை பொது ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகிர்ந்து அளிக்க கோரி ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சார்பில், கோவை டான்பிட் (தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாபு, அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை பொது ஏலம் விட வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai