Enable Javscript for better performance
தனியார் பல்கலைக்கழகத் தரவரிசை: அமிர்தா பல்கலை. முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பல்கலைக்கழகத் தரவரிசை: அமிர்தா பல்கலை. முதலிடம்

    By DIN  |   Published on : 07th April 2017 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசியக் கல்விசார் தரவரிசை கட்டமைப்பு வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை அமிர்தா பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
    இந்திய பல்கலைக்கழகங்களைத் தரநிர்ணயம் செய்வது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அண்மையில் தேசிய கல்விசார் தரவரிசை கட்டமைப்பு-2017 பட்டியலை வெளியிட்டார்.
    அதில், கோவையை அடுத்த எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழக வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அகில இந்திய அளவில் 9-ஆவது சிறந்த பல்கலைக்கழகமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலில் அமிர்தா பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழக வரிசையில் 2-ஆவது இடத்தையும், தேசிய அளவில் 14-ஆவது சிறந்த பல்கலைக்கழகமாகவும் இடம்பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    இதுகுறித்து அம்ரிதா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி. வெங்கட்ரங்கன் கூறியதாவது:
    2003-இல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் கல்வியில் நேர்த்தி என்ற பாரம்பரியத்தையும், மிகச்சிறப்பான ஆசிரியர்கள் குழுவையும் கொண்டு இயங்கி வருகிறோம். மேலும், 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரத்தைப் பின்பற்றி வருகிறோம். என்.ஐ.ஆர்.எஃப். 2017-க்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 10 பல்கலைக்கழகங்களில் அமிர்தா பல்கலைக்கழகத்தை தவிர வேறு எந்த தனியார் பல்கலைக்கழகமும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai