Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மேற்படிப்புக்கான சிறப்பு பயிற்சி முகாம் பொள்ளாச்சி பி.ஏ. பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    இப்பயிற்சி முகாமுக்கு பி.ஏ. பொறியியல் கல்லூரியின் முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். பி.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இருதய சிகிச்சை நிபுணர் ராமகிருஷ்ணன், ஓய்வுபெற்ற பள்ளிக் கல்வி தேர்வுத் துறை இயக்குநர் தேவராஜன், பொள்ளாச்சி மேற்கு காவல் துறை ஆய்வாளர் மகேந்திரன், ஓய்வுபெற்ற வணிக வரித் துறை இயக்குநர் சோமசுந்தரம், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காந்தி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தம், பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புளுகாண்டி,  சமத்தூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தங்கள் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்துப் பேசினார். இதில், பொள்ளாச்சி சுற்றுப் பகுதிகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 27 பள்ளிகளைச் சேர்ந்த 2,250 மாணவர்கள் பங்கேற்றனர்.
    சூலூரில்...: சூலூர் அருகே உள்ள கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் பொம்மன்ன ராஜா வாழ்த்துரை வழங்கினார். அரிமா சங்க ஆளுநர் ரங்கநாதன், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் துணை இயக்குநர் எ.ஜோதிமணி, மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரங்கநாதன், அமிர்தா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ரங்கநாதன், மருத்துவர் செல்வராஜ், கோவை மாவட்ட கல்வி அதிகாரி அருள்முருகன், கே.பி.ஆர். கல்விக் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி உள்ளிட்டோர் தங்கள் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai