Enable Javscript for better performance
பாரதியார் பல்கலை.யில் பிஎச்.டி. படிப்பு: மே 2-க்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பாரதியார் பல்கலை.யில் பிஎச்.டி. படிப்பு: மே 2-க்குள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 07th April 2017 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்பில் சேர மாணவ-மாணவிகள் மே 2-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைகளிலும், பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்களிலும் பிஎச்.டி. ஆராய்ச்சிப் பட்டப் படிப்பில் முழு நேரம், பகுதி நேரமாகச் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. மே 2-ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.  பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த 2016 ஜூலையில் நடத்திய பொது நுழைவுத் தேர்வை எழுதியவர்கள், எம்.ஃபில். முடித்தவர்கள், விமானப் படை, டி.ஆர்.டி.ஓ. ஆராய்ச்சியாளர்கள், நெட், ஸ்லெட், கேட் போன்ற தேர்வுகளை எழுதியவர்கள் உள்ளிட்டோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (w‌w‌w.b-​‌u.ac.‌i‌n) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 ஆகும். இதை பாங்க் ஆஃப் இந்தியா அல்லது பதிவாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை என்ற பெயரில் கோடிட்ட வங்கி வரைவோலையாக எடுத்து கோவையில் மாற்றத்தக்க வகையில் செலுத்த வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 2-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். பிஎச்.டி. பகுதி நேர, முழு நேர படிப்புக்கான சேர்க்கையானது பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண், பல்கலைக்கழக சட்ட விதிகளின் அடிப்படையில் நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai