Enable Javscript for better performance
பேருந்தில் கடத்தப்பட்ட 178 பவுன் நகை பறிமுதல்: கோவையில் 4.5 கிலோ நகை கொள்ளை வழக்கில் தொடர்பா? 3 பேரி- Dinamani

சுடச்சுட

    

    பேருந்தில் கடத்தப்பட்ட 178 பவுன் நகை பறிமுதல்: கோவையில் 4.5 கிலோ நகை கொள்ளை வழக்கில் தொடர்பா? 3 பேரிடம் தீவிர விசாரணை

    By DIN  |   Published on : 07th April 2017 07:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரில் இருந்து அரசுப் பேருந்து மூலமாக 178 பவுன் நகையைக் கடத்தி வந்த மூன்று பேருக்கும் கோவை நகைக் கடையில் நடைபெற்ற 4.5 கிலோ நகை கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
    கோவை, பெரியகடை வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (47). இவருக்கு சொந்தமாக ராஜ வீதியில் மொத்த தங்க நகைக் கடை உள்ளது. இவரிடம் கார் ஓட்டுநராக உக்கடத்தைச் சேர்ந்த ரியாசுதீன் (27) பணியாற்றி வந்தார்.
    இந்நிலையில், கடந்த மார்ச் 2-ஆம் தேதி ரியாசுதீன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி கடைக்குள் நுழைந்து, கடையில் இருந்த இரண்டு பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1.35 கோடி மதிப்புள்ள சுமார் 4.5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
    இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி கர்நாடக அரசுப் பேருந்து வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தது.
    அப்போது, ஆசனூர் மது விலக்கு சோதனைச் சாவடியில் அப்பேருந்தை போலீஸார் நிறுத்தி சோதனை நடத்தினர். பேருந்தில் சந்தேகப்படும்படி பயணித்த 3 பேரின் பையைத் திறந்துபார்த்தனர். உரிய ஆவணமின்றி பையில் 178 பவுன் நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
    இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், நகைகளைக் கடத்தி வந்தது கோவையைச் சேர்ந்த ரியாசுதீன், விஜயகுமார், அசாருதீன் என்பது தெரியவந்தது. மேலும், கோவை ராஜவீதியில் உள்ள நகைக் கடையில் மார்ச் மாதம் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் மூவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
    இது குறித்து கோவை மாநகர குற்றப் புலனாய்வு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவையில் இருந்து தனிப்படை போலீஸார் ஆசனூர் விரைந்து சென்று பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai