Enable Javscript for better performance
மனைவியை குடிபோதையில் கொன்ற கணவருக்கு ஆயுள்- Dinamani

சுடச்சுட

    

    குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    கோவை, இடையர்பாளையம், நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (27). இவரது மனைவி அனுசுயாதேவி. இந்தத் தம்பதியிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. சலூன் கடையில் பணியாற்றி வந்த மகுடீஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
    இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், 2015 ஜனவரி 16-ஆம் தேதி, மகுடீஸ்வரன் மது அருந்தி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    இதில், ஆத்திரமடைந்த மகுடீஸ்வரன், அவர் அணிந்திருந்த பெல்டால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மகுடீஸ்வரனைக் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மணிமொழி, குற்றம்சாட்டப்பட்ட மகுடீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இதில், அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai