Enable Javscript for better performance
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

    By DIN  |   Published on : 07th April 2017 07:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 65-ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
    இக்கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை, மாலை 6.30 மணிக்கு கொடுமுடி தீர்த்தம் கொண்டு வந்து தேன், திணை மாவுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை 6 மணிக்கு காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதலும், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி பக்தர்களின் பால்குடம் அபிஷேகம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வருதலும், மாலை 3 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை காலை 8 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடி எடுத்தலும், அன்னதானமும், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, மாலை 3 மணிக்கு திருவிளக்கு பூஜையும், மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் திருவீதி உலாவும், நள்ளிரவு 2 மணிக்கு மகா அபிஷேகம், வான வேடிக்கையுடன் விழா நிறைவுபெறுகிறது.
    விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்றத்தினர் செய்து
    வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai