Enable Javscript for better performance
ஹேக்கத்தான் இறுதிப் போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    ஹேக்கத்தான் இறுதிப் போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி முதலிடம்

    By DIN  |   Published on : 07th April 2017 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2017 இறுதிப் போட்டியில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.
    தொழில்நுட்ப ஆர்வலர்களை ஒரு இடத்தில் திரளச்செய்து அவர்களை மென்பொருள், செயலி போன்றவற்றை உருவாக்கத் தூண்டும் ஹேக்கத்தான் போட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் நடைபெற்றது.
    இதில், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் சார்பில் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் சீனிவாசன் தலைமையில் பங்கேற்ற டெக்னோ பிரிக்ஸ் குழுவினர் முதலிடம் பிடித்தனர். இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த சுஜிதா, ரேவதி, நித்யா, சதீஷ், விக்ரம் ஆகியோர் போலி மின்னஞ்சல்களை அடையாளம் கண்டு அவற்றைத் தடுப்பதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து பரிசுத் தொகையான ரூ.1 லட்சத்தை நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகரிடம் இருந்து இவர்கள் பெற்றனர்.
    முதல் பரிசு பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு உதவியாக இருந்த தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் ஜமீர் பாட்ஷா, தொழில்நுட்பப் பொறியாளர் அருண் ஆகியோரையும் கல்விக் குழும நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, கல்லூரி முதல்வர்கள் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai