Enable Javscript for better performance
கங்கா மருத்​து​வ​மனை இயக்​கு​நர் டாக்​டர் எஸ்.ராஜ​ச​பா​ப​திக்கு விருது​- Dinamani

சுடச்சுட

    

    கங்கா மருத்​து​வ​மனை இயக்​கு​நர் டாக்​டர் எஸ்.ராஜ​ச​பா​ப​திக்கு விருது​

    By DIN  |   Published on : 08th April 2017 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கங்கா மருத்​து​வ​மனை இயக்​கு​நர் டாக்​டர் எஸ்.ராஜ​ச​பா​ப​திக்கு அவி​னாசி​லிங்​கம் பல்​க​லைக்​க​ழக முன்​னாள் வேந்​தர் ராஜம்​மாள் பி.தேவ​தாஸ் சொற்​பொ​ழிவு விருது வழங்​கப்​பட்​டது.​
    கோவை அவி​னாசி​லிங்​கம் மனை​யி​யல் மற்​றும் மக​ளிர் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் ராஜம்​மாள் பி.தேவ​தா​ஸின் 98-ஆவது பிறந்​த​நாள் விழா மற்​றும் உலக சுகா​தார தின விழா வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​ இந்த விழா​வில்,​​ மருத்​து​வத் துறை​யில் சிறப்​பா​கப் பணி​யாற்றி வரும் கங்கா மருத்​து​வ​ம​னை​யின் இயக்​கு​நர் டாக்​டர் ராஜ​ச​பா​ப​திக்கு ராஜம்​மாள் பி.தேவ​தாஸ் சொற்​பொ​ழிவு விரு​தினை அவி​னாசி​லிங்​கம் கல்வி நிறு​வ​னங்​க​ளின் நிர்​வாக அறங்​கா​வ​லர் தி.ச.க.மீனாட்​சி​சுந்​த​ரம் வழங்​கி​னார்.​
    விரு​து​பெற்ற டாக்​டர் ராஜ​ச​பா​பதி பேசி​ய​தா​வது:​ ஒவ்​வொரு புகழ்​பெற்ற நிறு​வ​னத்​தின் வளர்ச்​சி​யி​லும் பெண்​கள் முக்​கி​யப் பங்கு வகிக்​கின்​ற​னர்.​ அவி​னாசி​லிங்​கம் பல்​க​லைக்​க​ழ​கம் புகழ்​பெற கார​ண​மாக முன்​னாள் வேந்​தர் ராஜம்​மாள் பி.தேவ​தாஸ் பணி​யாற்​றி​யுள்​ளார்.​ அவ​ரது விடா​மு​யற்சி,​​ தன்​ன​ல​மற்ற சேவை​யால் அவி​னாசி​லிங்​கம் மனை​யி​யல் கல்​லூரி,​​ பல்​க​லைக்​க​ழ​க​மாக மாறி​யுள்​ளது குறிப்​பி​டத்​தக்​கது என்​றார்.​ இந் நிகழ்ச்​சி​யில்,​​ பல்​க​லைக்​க​ழக வேந்​தர் பி.ஆர்.கிருஷ்​ண​கு​மார்,​​ துணை​வேந்​தர் பிரே​மா​வதி விஜ​யன்,​​ பதி​வா​ளர் கௌ​சல்யா உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai