Enable Javscript for better performance
கவுண்​டம்​பா​ளை​யத்​தில் ​மயங்​கிக் கிடந்​த​வர் சாவு​- Dinamani

சுடச்சுட

    

    கவுண்​டம்​பா​ளை​யத்​தில் ​மயங்​கிக் கிடந்​த​வர் சாவு​

    By DIN  |   Published on : 08th April 2017 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கவுண்​டம்​பா​ளை​யத்​தில் உள்ள தமிழ்​நாடு நுகர்​பொ​ருள் வாணி​பக் கழக அலு​வ​ல​கம் முன்பு மயங்​கிக் கிடந்​த​வரை போலீ​ஸார் மீட்டு கோவை அரசு மருத்​து​வ​ம​னைக்கு அனுப்பி வைத்​த​னர்.​ ஆனால் அவர் வழி​யி​லேயே உயி​ரி​ழந்​தார்.​ ​
    க​வுண்​டம்​பா​ளை​யத்​தில் உள்ள தமிழ்​நாடு நுகர்​பொ​ருள் வாணி​பக் கழக அலு​வ​ல​கத்தை ​
    திறக்க அதன் ஊழி​யர்​கள் வெள்​ளிக்​கி​ழமை காலை வந்​த​னர்.​ அப்​போது அலு​வ​ல​கம் முன்பு சுமார் 50 வயது மதிக்​கத்​தக்க ஒரு​வர் மயங்​கிய நிலை​யில் கிடந்​துள்​ளார்.​
    இது​கு​றித்து அலு​வ​ல​கப் பணி​யா​ளர்​கள்,​​ துடி​ய​லூர் காவல் நிலை​யத்​துக்கு தக​வல் அளித்​த​னர்.​ அங்கு வந்த போலீ​ஸார் மயங்கி கிடந்​த​வரை மீட்டு கோவை அரசு மருத்​து​ம​னைக்கு அனுப்பி வைத்​த​னர்.​ ஆனால் செல்​லும் வழி​யி​லேயே அவர் உயி​ரி​ழந்​தார்.​
    விசா​ர​ணை​யில் அவர்,​​ கோவை,​​ சுக்​கி​ர​வார் பேட்டை இடை​யர் வீதி​யைச் சேர்ந்த சப​ரி​நா​தன் என்​ப​தும்,​​ கவுண்​டம்​பா​ளை​யத்​தில் உள்ள தனது உற​வி​ன​ரைப் பார்க்க வந்​த​போது நெஞ்​சுவலி ஏற்​பட்​ட​தும் தெரி​ய​வந்​தது.​ அவ​ரது சகோ​த​ரர் ரவி​நா​தன் அளித்த புகா​ரின்​பே​ரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ள​னர்.​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai