காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீ
By DIN | Published on : 08th April 2017 08:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோவை ரயில் நிலையம் அருகே புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச்சில் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், இக்கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் தீப்பிடித்து, புகை வெளியேறியது. இது குறித்து அங்கு பணியில் இருந்த காவலர்கள், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயாணைப்புத் துறையினர் சுமார் 30 நிமிடம் போராடித் தீயை அணைத்தனர். தீ விபத்தில் அங்கு இருந்த கணினி, அலுவலகக் கோப்புகள் எரிந்து
சேதமாகின.