Enable Javscript for better performance
கோடை விடு​மு​றை​யில் விபத்​துகளைக் குறைக்க வாரம் ஒரு திட்​டம்​: கோவை மாந​க​ர போக்குவரத்துக் காவல் து- Dinamani

சுடச்சுட

    

    கோடை விடு​மு​றை​யில் விபத்​துகளைக் குறைக்க வாரம் ஒரு திட்​டம்​: கோவை மாந​க​ர போக்குவரத்துக் காவல் துறை அமல்

    By ஆர்.தர்ம​லிங்​கம்  |   Published on : 08th April 2017 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடை விடு​மு​றை​யில் சாலை விபத்​து​க​ளைக் குறைக்க வாரம் ஒரு திட்​டத்தை மாந​கர போக்​கு​வ​ரத்​துக் காவல் துறை​யி​னர் அமல்​ப​டுத்​தி​யுள்​ள​னர்.​
    தமி​ழ​கத்​தில் சென்​னைக்கு அடுத்​த​ப​டி​யாக வாக​னப் போக்​கு​வ​ரத்து அதி​கம் உள்ள இரண்​டா​வது பெரிய நக​ர​மாக கோவை உள்​ளது.​ கோவை மாந​க​ரில் நாள்​தோ​றும் 12 லட்​சம் வாக​னங்​கள் இயக்​கப்​ப​டு​கின்​றன.​ இதில் இரு சக்​கர வாக​னங்​க​ளின் எண்​ணிக்கை சுமார் 8.50 லட்​ச​மா​கும்.​
    மேலும்,​​ மாந​க​ரில் நாள்​தோ​றும் சுமார் 600-க்கும் மேற்​பட்ட இரு மற்​றும் நான்கு சக்​கர வாக​னங்​கள் புதி​தா​கப் பதிவு செய்​யப்​ப​டு​கின்​றன.​ ஆனால்,​​ வாக​னப் பெருக்​கத்​துக்கு ஏற்ப சாலை வச​தி​கள் இல்லை.​ கடந்த ஓராண்​டில் எந்​த​வி​த​மான புதிய பாலங்​களோ அல்​லது புதிய சாலை​களோ அமைக்​கப்​ப​ட​வில்லை.​ வாக​னப் பெருக்​கத்​துக்கு ஏற்ப சாலை வசதி மேம்​ப​டுத்​தப்​ப​டா​த​தால்,​​ ஆண்​டுக்கு ஆண்டு சாலை விபத்​து​கள் அதி​க​ரித்து வரு​வ​தைப் புள்ளி விவ​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​
    கோவை மாந​க​ரில் கடந்த ஆண்டு மட்​டும் 285 சாலை விபத்​து​க​ளில் 300 பேர் உயி​ரி​ழந்​துள்​ள​னர்.​ ஆனால்,​​ நடப்பு ஆண்டு கடந்த மூன்று மாதங்​க​ளில் நிகழ்ந்த 72 சாலை விபத்​து​க​ளில் 74 பேர் உயி​ரி​ழந்​துள்​ள​னர்.​ ஆனால்,​​ கடந்த ஆண்டு இதே மூன்று மாதங்​க​ளில் 63 விபத்​து​க​ளில் 65 பேர் இறந்​துள்​ள​னர்.​
    வாரம் ஒரு திட்​டம் அமல்:​ கோடை விடு​மு​றை​யில் விபத்​து​க​ளைக் குறைக்க வாரம் ஒரு திட்​டத்தை கோவை மாந​கர போக்​கு​வ​ரத்து காவல் துறை​யி​னர் மார்ச் 27-ஆம் தேதி முதல் அமல்​ப​டுத்தி வரு​கின்​ற​னர்.​ ​
    இதில்,​​ மார்ச் 27 முதல் ஏப்​ரல் 2-ஆம் தேதி வரை இரு சக்​கர வாக​னங்​க​ளில் மூன்று பேர் சென்​ற​தாக 1,068 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு அப​ரா​த​மாக ரூ.1 லட்​சத்து 6,800 வசூ​லிக்​கப்​பட்​டது.​
    இதைத் தொடர்ந்து,​​ ஏப்​ரல் 3 முதல் ஏப்​ரல் 9-ஆம் தேதி வரை வாகன எண் பல​கை​கள் சரி​யான வகை​யில் எழு​தப்​பட்​டுள்​ள​னவா என போக்​கு​வ​ரத்​துக் காவல் துறை​யி​ன​ரால் சோதனை நடத்​தப்​பட்டு வரு​கி​றது.​ இதில்,​​ வெள்​ளிக்​கி​ழமை ​(ஏப்​ரல் 7) வரை 600 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.​
    இதே​போன்று வரும் மே மாத இறுதி வரை​யி​லும் பல்​வேறு விதங்​க​ளில் சோத​னை​கள் நடத்த திட்​ட​மிட்​டுள்​ள​னர்.​ ​ கோவை மாந​க​ரில் வார இறுதி நாள்​க​ளான சனி,​​ ஞாயிற்​றுக்​கி​ழ​மை​க​ளில் மது அருந்​தி​விட்டு வாக​னம் ஓட்​டு​ப​வர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டு வரு​கி​றது.​
    மாண​வர்​கள் வாக​னம் ஓட்​டி​னால் உரி​மை​யா​ளர் மீது வழக்கு:​ 18 வயது பூர்த்தி அடை​யா​மல் வாக​னம் ஓட்​டு​ப​வர்​கள் மீது,​​ வரும் ஏப்​ரல் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை வழக்​குப் பதிவு செய்​யப்​பட உள்​ளது.​ கோடை விடு​மு​றை​யில் சிறப்பு வகுப்பு,​​ நீச்​சல் முகாம் உள்​ளிட்ட பல்​வேறு கார​ணங்​க​ளுக்​காக 18 வயது பூர்த்தி அடை​யா​மல் வாக​னம் ஓட்​டும் மாணவ,​​ மாண​வி​க​ளின் எண்​ணிக்கை அதி​க​ரிக்க வாய்ப்பு உள்​ள​தால் இந்த நட​வ​டிக்கை மேற்​கொள்​ளப்​பட உள்​ளது.​
    அவ்​வாறு வாக​னம் ஓட்​டும் மாண​வர்​கள்,​​ வாக​னத்​தின் உரி​மை​யா​ளர் என இரு​வ​ருக்​கும் தலா ரூ.500 அப​ரா​த​மாக விதிக்​க​வும் காவல் துறை​யி​னர் திட்​ட​மிட்​டுள்​ள​னர்.​ எனவே,​​ பெற்​றோர்​க​ளும் சிறு​வர்​க​ளி​டம் வாக​னத்​தைக் கொடுக்க வேண்​டாம் என்​றும் காவல் துறை​யி​னர் அறி​வு​றுத்​தி​யுள்​ள​னர்.​
    இது​கு​றித்து கோவை மாந​கர போக்​கு​வ​ரத்து துணை ஆணை​யர் எஸ்.சர​வ​ணன் கூறி​ய​தா​வது:​ சாலை விபத்​து​க​ளைக் குறைக்க கோவை மாந​கர காவல் துறை சார்​பில் பல்​வேறு நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.​ கடந்த ஆண்டு மட்​டும் தலைக்​க​வ​சம் அணி​யா​மல் வாக​னம் இயக்​கி​ய​தாக ரூ.2.5 கோடி அப​ரா​த​மாக வசூ​லிக்​கப்​பட்​டுள்​ளது.​ கடந்த மூன்று மாதங்​க​ளில் மட்​டும் 32,200 தலைக்​க​வச வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு ரூ.32 லட்​சத்து 20 ஆயி​ரம் வசூ​லிக்​கப்​பட்​டுள்​ளது.​ இருந்​தும் பெரும்​பா​லான வாகன ஓட்​டி​கள் தலைக்​க​வ​சம் அணி​யா​ம​லேயே செல்​கின்​ற​னர்.​ இத​னால் விபத்​து​க​ளில் உயி​ரி​ழப்​ப​வர்​க​ளின் எண்​ணிக்கை அதி​க​ரித்து வரு​வது வேதனை அளிக்​கி​றது.​ ​
    கோவை மாந​க​ரைப் பொருத்​த​வரை,​​ கோடை விடு​மு​றை​யில் கடந்த ஆண்டு அதிக அளவு சாலை விபத்​து​கள் நிகழ்ந்​துள்​ளன.​ கடந்த ஆண்டு ஏப்ர​லில் மட்​டும் 34 பேர் உயி​ரி​ழந்​துள்​ள​னர்.​ ஆகவே,​​ நடப்பு ஆண்டு ஏப்ர​லில் விபத்​து​க​ளைக் குறைக்க மூன்று பேர் சென்​றால் அப​ரா​தம்,​​ பள்ளி மாண​வர்​கள் வாக​னம் ஓட்​டி​னால் உரி​மை​யா​ளர்​கள் மீதும் வழக்கு போன்ற பல்​வேறு நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.​
    போக்​கு​வ​ரத்து விதி​மு​றை​களை முறை​யா​கக் கடைப்​பி​டித்​தால் மட்​டுமே விபத்​து​க​ளைக் குறைக்க இய​லும்.​ அதற்கு அனைத்து தரப்​பி​ன​ரின் ஒத்​து​ழைப்​பும் அவ​சி​யம் என்​றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai