Enable Javscript for better performance
சோம​னூர் நூல் வியா​பா​ரி​கள் ​காவல் நிலை​யத்​தில் புகார்- Dinamani

சுடச்சுட

    

    சோம​னூர் நூல் வியா​பா​ரி​கள் ​ காவல் நிலை​யத்​தில் புகார்

    By DIN  |   Published on : 08th April 2017 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சோம​னூ​ரில்,​​ நூல் ஏற்​றிச் செல்​லும் லாரி​களை போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ள​வர்​கள் தடுத்து நிறுத்​து​வ​தா​கக் கூறி,​​ நூல் வியா​பா​ரி​கள்,​​ முக​வர்​கள் சங்​கத்​தி​னர் கரு​மத்​தம்​பட்டி காவல் துணைக் கண்​கா​ணி​ப்பா​ள​ரி​டம் புகார் தெரி​வித்​துள்​ள​னர்.​
    சோம​னூ​ரில் கூலிக்கு நெசவு செய்​யும் விசைத்​தறி உரி​மை​யா​ளர்​கள் சங்​கம் சார்​பில் ஏப்​ரல் 2 ஆம் தேதி முதல் வேலை​நி​றுத்​தப் போராட்​டம் நடை​பெற்று வரு​கி​றது.​ ஆனால்,​​ இங்​குள்ள சொந்த ஜவுளி உற்​பத்​தி​யா​ளர்​கள் இப்​போ​ராட்​டத்​தில் ஈடு​ப​ட​வில்லை.​ இந்​நி​லை​யில்,​​ நூல் வியா​பா​ரி​கள்,​​ முக​வர்​கள் சங்​கத்​தி​னர்,​​ நூல் ஏற்​றிச்​செல்​லும் தங்​க​ளது லாரி​களை சிலர் தடுத்து நிறுத்​து​வ​தாக கரு​மத்​தம்​பட்டி காவல் நிலை​யத்​தி​லும்,​​ ​ காவல் துணைக் கண்​கா​ணிப்​பா​ள​ரி​டம் முறை​யிட்​ட​னர்.​ இது தொடர்​பாக துணைக் கண்​கா​ணிப்​பா​ளர்,​​ அனைத்​துத் தரப்​பி​ன​ரை​யும் அழைத்து சனிக்​கி​ழமை ​(ஏப்​ரல் 8) பேச்​சு​வார்த்தை நடத்த இருப்​ப​தாக புகார் தெரி​வித்த நூல் வியா​பா​ரி​கள் தரப்​பி​னர் தெரி​வித்​த​னர்.​ ​
    இது குறித்து கூலிக்கு நெசவு செய்​யும் விசைத்​த​றி​யா​ளர்​கள் சங்​கத் தலை​வர் பழ​னி​சாமி கூறு​கை​யில்,​​ "சோம​னூ​ரில் நடை​பெ​றும் வேலை​நி​றுத்​தப் போராட்​டத்​துக்கு அனைத்​துத் தரப்​பி​ன​ரை​யும் ஆத​ரவு அளிக்​கு​மாறு கேட்​டுக்​கொண்​டுள்​ளோம்.​ லாரி​க​ளில்,​​ உற்​பத்​தி​யான பொருள்​களை கொண்​டு​செல்ல எவ்​வி​த​மான தடை​யி​னை​யும் ஏற்​ப​டுத்​து​வ​தில்லை.​ மூலப்​பொ​ருள்​களை கொண்டு செல்​லும் வாக​னங்​கள் மட்​டுமே தடுத்து நிறுத்​தப்​ப​டு​கின்​றன' என்​றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai