Enable Javscript for better performance
தொழி​லா​ளர்​க​ளுக்கு ​சம்​பள உயர்வு ​வழங்​கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தொழி​லா​ளர்​க​ளுக்கு ​சம்​பள உயர்வு ​வழங்​கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 08th April 2017 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தோட்​டத் தொழி​லா​ளர்​க​ளுக்கு ஊதிய உயர்வு வழங்க தமி​ழக அரசு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்று வால்​பாறை திரா​விட தோட்​டத் தொழி​லா​ளர் முன்​னேற்ற சங்​கம் கோரிக்கை விடுத்​துள்​ளது.​ இது குறித்து சங்​கத்​தின் தலை​வர் எஸ்.கல்​யாணி தமி​ழக அர​சுக்கு அனுப்​பி​யுள்ள கடி​தத்​தில் கூறி​யி​ருப்​ப​தா​வது:​
    தேயிலை,​​ காபி தோட்​டங்​க​ளில் பணி​யாற்​றக்​கூ​டிய தொழி​லா​ளர்​க​ளுக்கு தற்​போது தினக் கூலி​யாக ரூ.235 மட்​டுமே வழங்​கப்​ப​டு​கி​றது.​ ஆனால்,​​ அண்டை மாநி​லத்​தைச் சேர்ந்த தோட்​டத் தொழி​லா​ளர்​க​ளுக்கு தினக் கூலி​யாக ரூ.313 வழங்​கப்​ப​டு​கி​றது.​ அதே​போல்,​​ நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவை விட​வும் கூடு​த​லாக தேயிலை பறித்​தால் தொழி​லா​ளர்​க​ளுக்கு ஊக்​கத் தொகை வழங்​கப்​ப​டு​வ​தில்லை.​ எனவே,​​ புதிய சம்​பள ஒப்​பந்​தத்​தில் தோட்​டத் தொழி​லா​ளர்​க​ளுக்கு தினக் கூலி​யாக ரூ.500 வழங்க அரசு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் எனத் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai