Enable Javscript for better performance
நாளை இறைச்சி ​விற்​ப​னைக்​குத் தடை- Dinamani

சுடச்சுட

    

    மஹா​வீர் ஜயந்​தி​யை​யொட்டி,​​ ஞாயிற்​றுக்​கி​ழமை ​(ஏப்​ரல் 9) இறைச்சி விற்​ப​னைக்கு கோவை மாந​க​ராட்சி தடை விதித்​துள்​ளது.​
    ​ இது குறித்து கோவை மாந​க​ராட்சி ஆணை​யர் டாக்​டர் விஜ​ய​கார்த்​தி​கே​யன் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்பு:​
    ​ மஹா​வீர் ஜயந்தி ஏப்​ரல் 9-ஆம் தேதி கொண்​டா​டப்​ப​டு​கி​றது.​ அன்​றைய தினத்​தில் ஆடு,​​ மாடு,​​ பன்றி,​​ கோழி​களை வதை செய்​ய​வும்,​​ இறைச்​சி​களை விற்​பனை செய்​ய​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.​ எனவே,​​ மாந​க​ராட்சி எல்​லைக்கு உள்​பட்ட பகு​தி​க​ளில் ஆட்​டி​றைச்சி,​​ மாட்​டி​றைச்சி,​​ கோழி இறைச்சி,​​ பன்றி இறைச்​சிக் கடை​களை மூட வேண்​டும்.​ ​ கோவை மாந​க​ராட்​சி​யால் செயல்​ப​டுத்​தப்​பட்டு வரும் உக்​க​டம் ஆடு அறு​வை​மனை,​​ சிங்​கா​நல்​லூர் ஆடு அறு​வை​மனை,​​ சத்தி சாலை​யில் உள்ள ​மாடு அறு​வை​மனை,​​ போத்​த​னூர்,​​ செட்​டி​பா​ளை​யம் மாடு அறு​வை​மனை,​​ துடி​ய​லூர் ஆடு அறு​வை​மனை என மாந​க​ராட்​சி​யின் கீழ் இயங்கி வரும் இத்​த​கைய அறு​வை​ம​னை​கள் செயல்​ப​டாது.​ இத்​தி​னத்​தில் தடையை மீறி இறைச்சி விற்​பனை செய்​வோர் மீது நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் எனத் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai