Enable Javscript for better performance
நேரு கல்​லூ​ரி​யில்விமா​னக் கண்​காட்சி தொடக்​கம்​- Dinamani

சுடச்சுட

    

    கோவை,​​ குனி​ய​முத்​தூ​ரில் உள்ள நேரு விமா​ன​வி​யல் கல்​லூ​ரி​யில் ஏரோ​பி​ளஸ்-​2017 விமா​னக் கண்​காட்சி வெள்​ளிக்​கி​ழமை தொடங்​கி​யது.​
    விமா​னம்,​​ ஹெலி​காப்​டர் பற்றி பள்ளி,​​ கல்​லூரி மாண​வர்​கள்,​​ பொது​மக்​கள் தெரிந்து கொள்​ளும் வகை​யில் ஆண்​டு​தோ​றும் விமா​னக் கண்​காட்சி இக் கல்​லூரி சார்​பில் ​ நடத்​தப்​பட்டு வரு​கி​றது.​
    நடப்பு ஆண்​டில் மூன்று நாள்​க​ளுக்கு நடை​பெ​றும் இந்த விமா​னக் கண்​காட்​சியை கோவை சர்​வ​தேச விமான நிலைய இயக்​கு​நர் பிர​காஷ் ரெட்டி தொடக்​கி​வைத்​தார்.​
    இதில்,​​ கத்​தார் ஏர்​வேஸ் நிறு​வ​னத்​தைச் சேர்ந்த பொறி​யா​ளர் ​ செபஸ்​டி​யன் சிறப்பு விருந்​தி​ன​ராக கலந்து கொண்​டார்.​ விழா​வுக்கு நேரு கல்வி அறக்​கட்​டளை நிர்​வாக அறங்​கா​வ​லர் கிருஷ்​ண​தாஸ் முன்​னிலை வகித்​தார்.​ நேரு கல்​லூரி டீன் பி.ஆர்.பாலாஜி வர​வேற்​றார்.​ நேரு கல்​விக் குழு​மங்​க​ளின் செய​ல​ரும்,​​ தலைமை நிர்​வாக அதி​கா​ரி​யு​மான பி.கிருஷ்​ண​கு​மார் வாழ்த்​துரை வழங்​கி​னார்.​
    இக்​கண்​காட்​சி​யில்,​​ 10-க்கும் மேற்​பட்ட விமா​னம்,​​ ஹெலி​காப்​டர் உள்​ளிட்ட வானூர்​தி​கள் பார்​வைக்​காக அணி​வ​குத்து நிறுத்​தப்​பட்​டி​ருந்​தன.​மேலும்,​​ மாண​வர்​க​ளின் கண்​டு​பி​டிப்​பான ரிமோட் மூலம் இயக்​கப்​ப​டும் சிறிய கார்,​​ அனைத்து வச​தி​க​ளும் உடைய சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் மாதி​ரி​யும் பார்​வை​யா​ளர்​களை வெகு​வாக கவர்ந்​தது.​
    இந்​தக் கண்​காட்​சியை ஏப்​ரல் 9-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பார்​வை​யி​ட​லாம்.​

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai