Enable Javscript for better performance
பெயிண்​ட​ருக்கு கத்​திக்​குத்து:​ இரு​வர் கைது​- Dinamani

சுடச்சுட

    

    பேரூர் கோயில் திரு​வி​ழா​வில் பங்​கேற்க வந்த இளை​ஞரை கத்​தி​யால் குத்​திய இரு​வரை போலீ​ஸார் கைது செய்​த​னர்.​ ​ ​
    பேரூர் செட்​டி​பா​ளை​யம் சிறு​வாணி நக​ரைச் சேர்ந்​த​வர் ரவிக்​கு​மார்.​ இவ​ரது மகன் ரத்​தீஷ் ​(29).​ பெயிண்​ட​ராக பணி​யாற்றி வரு​கி​றார்.​ இவர்,​​ பேரூர் பட்​டீ​சு​வர சுவாமி கோயில் பங்​குனி உத்​தி​ரத் திரு​வி​ழா​வில் பங்​கேற்​ப​தற்​காக வியா​ழக்​கி​ழமை வந்​தி​ருந்​தார்.​ இரவு 7 மணி அள​வில் நொய்​யல் ஆற்​றங்​க​ரை​யில் உள்ள விநா​ய​கர் கோயில் அருகே ரத்​தீஷ் நின்று கொண்​டி​ருந்​தார்.​
    அப்​போது அங்கு வந்த குனி​ய​முத்​தூ​ரைச் சேர்ந்த சதீஷ்​கு​மார் ​(28),​ இந்து பிர​பா​கர் ​(26) ஆகி​யோர் இசைக் கரு​வியை இசைத்து அதிக ஒலி எழுப்​பி​னார்​க​ளாம்.​ இத​னால் ரத்​தீ​ஷுக்​கும்,​​ அவர்​க​ளுக்​கும் தக​ராறு ஏற்​பட்​டுள்​ளது.​ அப்​போது,​​ சதீஷ்​கு​மார்,​​ இந்து பிர​பா​கர் ஆகி​யோர் ரத்​தீ​ஷ் வயிற்​றில் கத்​தி​யால் குத்​தி​விட்டு ஓடி​விட்​ட​னர்.​ ​
    ப​டு​கா​ய​ம​டைந்த ரத்​தீஷை அரு​கில் இருந்​த​வர்​கள் மீட்டு,​​ கோவை அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்த்​த​னர்.​ இதை​ய​டுத்து சதீஷ்​கு​மார்,​​ இந்து பிர​பா​கர் ஆகி​யோரை போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​த​னர்.​ இது​கு​றித்து பேரூர் காவல் துறை​யி​னர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​ற​னர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai