Enable Javscript for better performance
மாண​வர்​க​ளுக்கு மேற்​ப​டிப்பு ​ஆலோ​சனை முகாம்​- Dinamani

சுடச்சுட

    

    கார​மடை,​​ டாக்​டர் ஆர்.வி.கலை,​அறி​வி​யல் கல்​லூரி வளா​கத்​தில் பத்​தாம் வகுப்பு,​​ 12-ஆம் வகுப்பு மாணவ,​​ மாண​வி​ய​ருக்கு மேற்ப​டிப்பு,​​ வேலை​வாய்ப்பு குறித்த ஆலோ​சனை முகாம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​
    சென்னை பள்ளி கல்​வித் துறை,​​ கோவை மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​கம் சார்​பில் நடை​பெற்ற இந்த முகா​முக்கு முதன்​மைக் கல்வி அலு​வ​லர் அருள்​மு​ரு​கன் தலைமை வகித்​தார்.​ மாவட்​டக் கல்வி அலு​வ​லர் தேன்​மொழி,​​ ஆர்.வி.கலைக் கல்​லூ​ரித் தாளா​ளர் வி.ராம​கி​ருஷ்​ணன் முன்​னிலை வகித்​தார்.​ திட்ட ஒருங்​கி​ணைப்​பா​ள​ரும்,​​ அரசு மேநி​லைப் பள்​ளித் தலை​மை​யா​சி​ரி​ய​ரு​மான பானு​மதி வர​வேற்​றார்.​
    ஆர்.வி.கலைக் கல்​லூரி முதல்​வர் ஆனந்​த​கோ​பால்,​​ கோவை அரசு ஆசி​ரி​யர் பயிற்​சிப் பள்​ளிப் பேரா​சி​ரி​யர் டாக்​டர் பொன்​னு​சாமி,​​ ஸ்ரீரா​ம​கி​ருஷ்ணா தொழில் பயிற்சி மையப் பயிற்​சி​யா​ளர் வேணு​கு​மார்,​​ செவி​லி​யர் கல்​லூரி துணை முதல்​வர் டாக்​டர் கவிதா,​​ செளமியா மருத்​து​வ​ம​னைத் தலை​வர் டாக்​டர் ஜெய​ரா​மன்,​​ கோவை தொழில் நிறு​வ​னத்​தைச் சேர்ந்த சீனி​வா​சன்,​​ ஐயப்​பன்,​​ வேளாண் உதவி இயக்​கு​நர் விஜ​யன்,​​ வழக்​கு​ரை​ஞர் ரகு​மான்,​​ தணிக்​கை​யா​ளர் வனிதா,​​ கணக்​கி​யல் நிறு​வன துணைத் தலை​வர் டாக்​டர் சுப்​பு​ரா​மன் உள்​ளிட்​டோர் பல்​வேறு துறை​க​ளின் எதிர்​கால வளர்ச்சி குறித்து மாண​வர்​க​ளுக்கு விளக்​கி​னர்.​
    பள்ளி படிப்​பிற்​குப் பின்​னர் உள்ள மேற்​ப​டிப்​பு​கள்,​​ வேலை​வாய்ப்பு குறித்து மாண​வர்​க​ளுக்கு விளக்​க​மாக எடுத்​து​ரைக்​கப்​பட்​டது.​ மேட்​டுப்​பா​ளை​யம்,​​ கார​மடை,​​ சிறு​மு​கை​யைச் சுற்​றி​யுள்ள பகு​தி​க​ளைச் சேர்ந்த 18 அரசு பள்​ளி​க​ளின் பிளஸ் 2 வகுப்​புக்​க​ளைச் சேர்ந்த 1,298 பேர்,​​ 10-ஆம் வகுப்​பைச் சேர்ந்த 1,042 பேர் பங்​கேற்​ற​னர்.​ பள்​ளித் தலை​மை​யா​சி​ரி​யர்​க​ளான சண்​மு​க​சுந்​த​ரம்,​​ ​ இந்​திரா,​​ பரி​ம​ளம் ஆசி​ரி​யர்​கள் ஆனந்​த​கு​மார்,​​ சாமி​நா​தன்,​​ செல்​வ​பா​ரத்,​​ சண்​மு​கம்,​​ அருள்​பி​ர​சாத்,​​ ராஜேந்​தி​ரன் உள்​பட பல​ரும் கலந்து கொண்​ட​னர்.​ சீளி​யூர் துரை​சாமி கவு​டர் அரசு மேநி​லைப் பள்ளி தலை​மை​யா​சி​ரி​யர் சண்​மு​க​சுந்​த​ரம் நன்றி கூறி​னார்.​ ​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai