Enable Javscript for better performance
மின்​சா​ரம் பாய்ந்து தொழி​லாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை,​​ பேரூர் அருகே மின்​சா​ரம் பாய்ந்த விபத்​தில் விவ​சாய கூலித் தொழி​லாளி உயி​ரி​ழந்​தார்.​
    கொ​டைக்​கா​னல் அருகே வட​க​வுஞ்சி பகு​தி​யைச் சேர்ந்​த​வர் பர​ம​சி​வம் ​(62).​ இவர் பேரூர் அருகே உள்ள தெலுங்​கு​பா​ளை​யத்​தில் சேத்​து​மா​வாய்க்​கால்,​​ சி.ஜி.வி.​ கால​னி​யில் கிருஷ்​ண​சாமி என்​ப​வ​ருக்கு சொந்​த​மான தோட்​டத்​தில் தங்கி விவ​சா​யக் கூலித் தொழி​லா​ளி​யாக வேலை செய்து வந்​தார்.​ இந்​நி​லை​யில் இவர்,​​ கடந்த சில தினங்​க​ளுக்கு முன்​னர் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு,​​ வியா​ழக்​கி​ழமை இரவு 10 மணிக்​குத் தோட்​டத்​துக்கு திரும்​பி​யுள்​ளார்.​ அந்த நேரத்​தில் மழை பெய்​த​தால்,​​ அங்கு இருந்த தகர கொட்​ட​கை​யைப் பூட்​டு​வ​தற்​காக சென்​றுள்​ளார்.​ அப்​போது,​​ எதிர்​பா​ரா​த​வி​த​மாக,​​ மின்​க​சிவு ஏற்​பட்டு தக​ரக் கொட்​ட​கை​யில் பர​வி​ய​தால்,​​ பர​ம​சி​வத்​தின் மீது மின்​சா​ரம் பாய்ந்​துள்​ளது.​ இதில் அவர் தூக்கி வீசப்​பட்​டார்.​
    இதை​ய​டுத்து அவரை கோவை அரசு மருத்​து​வ​ம​னைக்கு கொண்டு சென்​ற​னர்.​ அங்கு அவ​ரைப் பரி​சோ​தித்த மருத்​து​வர்​கள்,​​ அவர் ஏற்​கெ​னவே இறந்து விட்​ட​தாக தெரி​வித்​த​னர்.​ இது​கு​றித்து பேரூர் காவல் துறை​யி​னர் விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai