Enable Javscript for better performance
மூடப்​பட்ட மதுக் கடை​க​ளின் சாவி​களை ஒப்​ப​டைக்​கும் போராட்​டம்- Dinamani

சுடச்சுட

    

    மூடப்​பட்ட மதுக் கடை​க​ளின் சாவி​களை ஒப்​ப​டைக்​கும் போராட்​டம்

    By DIN  |   Published on : 08th April 2017 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதி​மன்ற உத்​த​ர​வுப்​படி மூடப்​பட்ட டாஸ்​மாக் கடை​க​ளின் சாவி​களை ஒப்​ப​டைக்​கும் போராட்​டத்​தில் ஊழி​யர்​கள் ​ வெள்​ளிக்​கி​ழமை ஈடு​பட்​ட​னர்.​
    ​ கோயம்​புத்​தூர் மாவட்ட டாஸ்​மாக் ஊழி​யர் சங்​கத் தலை​வர் எஸ்.மூர்த்தி தலை​மை​யில் டாஸ்​மாக் ஊழி​யர்​கள்,​​ மாவட்ட நிர்​வா​கத்​தி​டம் மூடப்​பட்ட டாஸ்​மாக் மதுக் கடை​க​ளின் சாவி​களை ஒப்​ப​டைக்​கும் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​​ இது குறித்து சங்​கத் தலை​வர் மூர்த்தி கூறி​ய​தா​வது:​
    ​ உச்ச நீதி​மன்ற உத்​த​ர​வுப்​படி தேசிய,​​ மாநில நெடுஞ்​சா​லை​க​ளில் செயல்​பட்டு வந்த டாஸ்​மாக் ​மதுக் கடை​கள் மூடப்​பட்​டுள்​ளன.​ இதில்,​​ கோவை வடக்கு மாவட்​டத்​தில் 96 கடை​கள்,​​ தெற்கு மாவட்​டத்​தில் 84 கடை​கள் என மொத்​தம் 180 கடை​கள் மூடப்​பட்​டுள்​ளன.​
    ​ மூடப்​பட்​டுள்ள கடை​க​ளில் இருந்து மது பாட்​டில்​கள்,​​ தள​வா​டப் பொருள்​கள் அகற்​றப்​ப​டா​மல் உள்​ளன.​ தற்​போது இக்​க​டை​கள் பாது​காப்​பற்ற நிலை​யில் உள்​ளன.​ இக்​க​டை​க​ளின் சாவி​கள் டாஸ்​மாக் ஊழி​யர்​க​ளின் பொறுப்​பில் உள்​ளன.​ இக்​க​டை​க​ளில் ஏதே​னும் இழப்பு ஏற்​பட்​டால்,​​ அதற்கு ஊழி​யர்​கள் பொறுப்​பேற்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.​
    எனவே,​​ மூடப்​பட்​டுள்ள மது​பா​னக் கடை​க​ளில் உள்ள ​பொருள்​க​ளுக்கு அதன் நிர்​வா​கம் பொறுப்​பேற்​றுக் கொள்ள வேண்​டும்.​ ​ மூடப்​பட்ட கடை​க​ளில் பணி​யாற்​றிய ஊழி​யர்​க​ளுக்கு மாற்​றுப்​பணி வழங்​கப்​ப​ட​வில்லை.​ஊழி​யர்​க​ளின் கல்​வித் தகு​திக்கு ஏற்ப அர​சுத் துறை​கள்,​​ அரசு நிறு​வ​னங்​க​ளில் உள்ள காலிப் பணி​யி​டங்​க​ளில் பணி நிய​ம​னம் செய்ய வேண்​டும் என்​றார்.​ ​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai