Enable Javscript for better performance
வட மாநில இளை​ஞர் சாவில் திருப்​பம்: வேலைக்கு அழைத்து வந்​த​வர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வட மாநில இளை​ஞர் சாவில் திருப்​பம்: வேலைக்கு அழைத்து வந்​த​வர் கைது

    By DIN  |   Published on : 08th April 2017 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரு​மத்​தம்​பட்டி அருகே தண்​ட​வா​ளத்​தில் ஒடிஸா மாநில இளை​ஞர் இறந்து கிடந்​தது தொடர்​பாக தற்​கொலை வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார்,​​ தற்​போது அதைக் கொலை வழக்​கா​கப் பதிவு செய்து,​​ ஒரு​வ​ரைக் கைது செய்​துள்​ள​னர்.​
    ​ கரு​மத்​தம்​பட்டி அருகே செம்​மாண்​டாம்​பா​ளை​யம்-​ வடு​க​கா​ளி​பா​ளை​யத்​துக்கு இடையே ரயில் தண்​ட​வா​ளத்​தில் இறந்து கிடந்த வட மாநில இளை​ஞ​ரின் சட​லம் கடந்த மாதம் 31-ஆம் தேதி போலீ​ஸா​ரால் மீட்​கப்​பட்​டது.​ விசா​ர​ணை​யில்,​​ இறந்​த​வர் ஒடிஸா மாநி​லம்,​​ பாத்ரா மாவட்​டத்​தைச் சேர்ந்த மங்​க​ராஜ் ஜனா​வின் மகன் சஞ்​சய் ஜனா ​(20) என்​பது தெரி​ய​வந்​தது.​ இது தொடர்​பாக ரயிவே போலீ​ஸார்,​​ தற்​கொலை வழக்​குப் பதிவு செய்​த​னர்.​
    ​ இந்​நி​லை​யில்,​​ தன்​னு​டன் பணி​யாற்​றிய ஒடிஸா மாநி​லத்​தைச் சேர்ந்த இளை​ஞ​ரைக் காண​வில்லை என்​றும்,​​ அவரை சிலர் தாக்​கி​ய​தைப் பார்த்​த​தா​க​வும் கூறி,​​ அதே ​மாநி​லத்​தைச் சேர்ந்​த​வர் கரு​மத்​தம்​பட்டி காவல் துறை​யில் புகார் தெரி​வித்​தார்.​ அவர் கூறிய அடை​யா​ளங்​களை வைத்து போலீ​ஸார் விசா​ரணை செய்​த​தில்,​​ காணா​மல்​போ​னது சஞ்​சய் ஜனா எனத் தெரி​ய​வந்​தது.​
    ​ இதை​ய​டுத்து,​​ ரயிவே போலீ​ஸார்,​​ இவ்​வ​ழக்கை கரு​மத்​தம்​பட்டி காவல் நிலை​யத்​துக்கு மாற்​றி​னர்.​ கரு​மத்​தம்​பட்டி போலீ​ஸார்,​​ இவ்​வ​ழக்கை கொலை வழக்​கா​கப் பதிவு செய்து விசா​ரித்​த​னர்.​ ஒடி​ஸா​வில் இருந்து சஞ்​சய் ஜனாவை கோவைக்கு அழைத்து வந்த ரஞ்​சித் பிஸ்​வால் என்​ப​வ​ரைப் பிடித்து விசா​ரித்​த​னர்.​
    ​ செம்​மாண்​டம்​பா​ளை​யத்​தில் உள்ள தனி​யார் நூற்​பா​லை​யில் பணி​யில் சேர்ந்த சில நாள்​க​ளி​லேயே சஞ்​சய் ஜனா,​​ தன் சொந்த ஊருக்​குச் செல்ல விரும்​பு​வ​தாக தன்னை வேலைக்​குச் சேர்ந்​து​விட்ட ரஞ்​சித் பிஸ்​வா​லி​டம் கூறி​னா​ராம்.​ அதற்கு சஞ்​சய் ஜனா​வி​டம்,​​ சில நாள்​க​ளுக்​குப் பின்​னர் தானே ஊருக்கு அழைத்​துச் செல்​வ​தாக ரஞ்​சித் பிஸ்​வால் தெரி​வித்​துள்​ளார்.​
    ​ இந்​நி​லை​யில் சஞ்​சய் ஜனா,​​ ரஞ்​சித் பிஸ்​வால் வீட்​டிற்​குச் சென்று கடந்த மார்ச் 31-ஆம் தேதி தக​றா​ரில் ஈடு​பட்​டா​ராம்.​ அப்​போது,​​ ரஞ்​சித் பிஸ்​வால்,​​ அவ​ரது நண்​பர்​க​ளான பிர​சாந்த் ​(30),​ அஜய் ​(30),​ ஆதித்யா​(30) ஆகி​யோர் சேர்ந்து சஞ்​சய் ஜனாவை தாக்​கி​யுள்​ள​னர்.​ இத​னால்,​​ சம்​பவ இடத்​தி​லேயே அவர் இறந்​து​விட்​டார்.​ அதை​ய​டுத்து,​​ ரஞ்​சித் பிஸ்​வா​லும்,​​ அவ​ரது நண்​பர்​க​ளும் சேர்ந்து சஞ்​சய் ஜனா​வின் உடலை தண்​ட​வா​ளத்​தில் வீசிச் சென்​ற​தாக விசா​ர​ணை​யில் தெரி​ய​வந்​தது.​ இது தொடர்​பாக போலீ​ஸார்,​​ ரஞ்​சித் பிஸ்​வாலை கைது செய்​த​னர்.​ இதில் தொடர்​பு​டைய மேலும் மூவ​ரைத் தேடி வரு​கின்​ற​னர்.​ ​

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai