Enable Javscript for better performance
வழக்​குப் பதிவு விவ​கா​ரம்: ​ தமி​ழக,​​ கேரள ​அரசு அதி​கா​ரி​கள்பேச்​சு​வார்த்தை ரத்து​- Dinamani

சுடச்சுட

    

    வழக்​குப் பதிவு விவ​கா​ரம்: ​ தமி​ழக,​​ கேரள ​அரசு அதி​கா​ரி​கள் பேச்​சு​வார்த்தை ரத்து​

    By DIN  |   Published on : 08th April 2017 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமி​ழக அதி​கா​ரி​கள் மீது கேர​ளப் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்த விவ​கா​ரம் குறித்த பேச்சு வார்த்​தைக்கு அம்​மா​நில மாவட்ட வன அலு​வ​லர் ​வரா​த​தால் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெ​று​வ​தாக இருந்த இக்​கூட்​டம் ரத்​தா​னது.​
    ​ பரம்​பிக்​கு​ளத்​தில் கடந்த ஆண்டு செப்​டம்​ப​ரில் நடை​பெற்ற தடி​யடி சம்​ப​வத்​தில் பாதிக்​கப்​பட்ட தமி​ழக பொதுப் பணித் துறை அதி​கா​ரி​கள்,​​ தாற்​கா​லி​கப் பணி​யா​ளர்​கள்,​​ பொது​மக்​கள் உள்​பட 42 பேருக்கு கேரள மாநி​லம்,​​ பரம்​பிக்​கு​ளம் போலீ​ஸார் சமீ​பத்​தில் நோட்​டீஸ் அனுப்​பி​யி​ருந்​த​னர்.​ அதில்,​​ உங்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தா​க​வும்,​​ வழக்கு விசா​ர​ணைக்​காக அழைக்​கும்​போ​தெல்​லாம்,​​ சித்​தூர் நீதி​மன்​றத்​தில் ஆஜ​ராக வேண்​டும் எனக் குறிப்​பி​டப்​பட்​டி​ருந்​தது.​
    ​ இதை​ய​டுத்து,​​ கோவை பொதுப் பணித் துறை தலை​மைப் பொறி​யா​ளர் வெங்​க​டா​ச​லம் இப்​பி​ரச்னை குறித்து அர​சின் கவ​னத்​துக்​குக் கொண்டு சென்​றார்.​ ஏற்​கெ​னவே,​​ கடந்த ஆண்டு செப்​டம்​பர் 26-ஆம் தேதி தமி​ழக,​​ கேரள அதி​கா​ரி​களை அழைத்து பொள்​ளாச்சி சார் ஆட்​சி​யர் காயத்​ரி பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.​
    அப்​போது,​​ இரு​த​ரப்​பி​லும் பிரச்​னையை முடித்து கொள்ள சம​ர​சம் செய்​யப்​பட்​டது.​ ​
    ​ இந்​நி​லை​யில்,​​ 6 மாதங்​க​ளுக்​குப் பின்​னர் நீதி​மன்​றத்​தில் ஆஜ​ரா​கு​மாறு பரம்​பிக்​கு​ளம் போலீ​ஸார் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ள​தால்,​​ கேரள மாநி​லம்,​​ பாலக்​காடு மாவட்ட காவல் துறைக் கண்​கா​ணிப்​பா​ளர்,​​ பரம்​பிக்​கு​ளம் மாவட்ட வன அலு​வ​லர் அஞ்​சன் குமார்,​​ தமி​ழக பொதுப் பணித் துறை அதி​கா​ரி​கள் ஆகி​யோரை அழைத்து மீண்​டும் பேச்​சு​வார்த்தை நடத்த முடிவு செய்​யப்​பட்​டது.​ அதன்​படி,​​ பொள்​ளாச்சி சார் ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் வெள்​ளிக்​கி​ழமை ​(ஏப்​ரல் 7) மாலை 4 மணி அள​வில் பேச்​சு​வார்த்தை நடை​பெ​றும் என ஏற்​கெ​னவே தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது.​ இதற்கு கேரள அதி​கா​ரி​கள் சம்​ம​தம் தெரி​வித்​தி​ருந்​த​னர்.​
    ​ இந்​நி​லை​யில்,​​ பரம்​பிக்​கு​ளம் மாவட்ட வன அலு​வ​லர் அஞ்​சன் குமார்,​​ திடீ​ரென தான் சமா​தா​னப் பேச்​சு​வார்த்​தைக் கூட்​டத்​துக்கு வர இய​லாது எனக் கூறி​விட்​டா​ராம்.​ இதை​ய​டுத்து,​​ இரு மாநில அரசு அதி​கா​ரி​க​ளின் பேச்​சு​வார்த்​தைக்​கான கூட்​டம் ரத்​தா​னது.​ இந்​நி​லை​யில்,​​ பேச்​சு​வார்த்​தையை மீண்​டும் வரும் 18-ஆம் தேதி நடத்த சார் ஆட்​சி​யர் அழைப்​பு​வி​டுத்​துள்​ளார்.​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai