Enable Javscript for better performance
வால்​பா​றை​யில் மாண​வர்​க​ளுக்கு ​வழி​காட்​டு​தல் பயிற்சி முகாம்​- Dinamani

சுடச்சுட

    

    வால்​பா​றை​யில் மாண​வர்​க​ளுக்கு ​ வழி​காட்​டு​தல் பயிற்சி முகாம்​

    By DIN  |   Published on : 08th April 2017 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் வால்​பா​றை​யில்,​​ ​ பொதுத் தேர்வு எழு​தி​யுள்ள மாண​வர்​க​ளுக்​கான சிறப்பு பயிற்சி முகாம் வெள்​ளிக்​கி​ழமை ​நடை​பெற்​றது.​
    வால்​பாறை தூய இரு​தய பெண்​கள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் நடை​பெற்ற இப்​ப​யிற்சி ​முகா​மில் தலைமை ஆசி​ரி​யர் எமல்டா வர​வேற்​றுப் பேசி​னார்.​ வால்​பாறை,​​ பார​தி​யார் பல்​க​லைக்​க​ழக கல்​லூரி முதல்​வர் தலைமை வகித்​தார்.​ முகாம் ஒருங்​கி​னைப்​பா​ளர்​க​ளான அர​சுப் பள்ளி தலைமை ஆசி​ரி​யர்​கள் ராபின்​சன்,​​ சிவன்​ராஜ் ஆகி​யோர் முன்​னிலை ​வகித்​த​னர்.​
    ​இதில்,​​ தபால் துறை அதி​காரி அழ​கு​ராஜ்,​​ அரசு ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர் வசந்த்,​​ ரெப்கோ வங்கி வேலா​ளர் பெலிக்ஸ்,​​ வழக்​கு​ரை​ஞர் பால்​பாண்டி,​​ திருச்சி இம​யம் பொறி​யி​யல் கல்​லூரி முதல்​வர் தியா​க​ரா​ஜன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்டு ​
    தங்​கள் துறை​யைப் பற்​றி​யும்,​​ வேலை​வாய்ப்​பு​கள் குறித்​தும் பேசி​னார்​கள்.​ வால்​பாறை வட்​டா​ரத்​தில் 10-ஆம் வகுப்பு,​​ பிளஸ் 2 பொதுத் தேர்வு எழு​திய ஆயி​ரக்​க​ணக்​கான மாண​வர்​கள் பங்​கேற்​ற​னர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai