Enable Javscript for better performance
​மதுக் கடை முன்​பாக பெண்​கள் தொடர் ஒப்​பா​ரிப் போராட்​டம்- Dinamani

சுடச்சுட

    

    ​மதுக் கடை முன்​பாக பெண்​கள் தொடர் ஒப்​பா​ரிப் போராட்​டம்

    By DIN  |   Published on : 08th April 2017 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்​னூர் அருகே காக்​கா​​பா​ளை​யத்​தில் மது​பா​னக் கடை திறப்​ப​தற்கு எதிர்ப்​புத் தெரி​வித்​துப் பெண்​கள் 3-ஆவது நாளாக ஒப்​பாரி போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​ற​னர்.​
    ​ அன்​னூர்-​சோம​னூர் சாலை​யில்,​​ சொக்​கம்​பா​ளை​யம் பிரி​வில் செயல்​பட்டு வந்த மது​பா​னக் கடை உச்ச நீதி​மன்ற உத்​த​ர​வின்​படி அகற்​றப்​பட்​டது.​
    இதை​ய​டுத்து,​​ அந்த மது​பா​னக் கடையை காக்​கா​பா​ளை​யம் நான்கு சாலை சந்​திப்​பில் அமைக்க டாஸ்​மாக் நிர்​வா​கம் நட​வ​டிக்கை எடுத்​துள்​ளது.​ இதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து காக்​கா​பா​ளை​யம்,​​ பது​வம்​பள்ளி,​​ காடு​வெட்​டி​பா​ளை​யம்,​​ பிள்​ளை​யப்​பம்​பா​ளை​யம் உள்​ளிட்ட பகு​தி​க​ளைச் சேர்ந்த பொது​மக்​கள்,​​ புதிய இடத்​தில் அமைக்​கப்​ப​ட​வுள்ள மது​பா​னக் கடை முன்​பாக கடந்த புதன்​கி​ழமை முதல் முற்​று​கைப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ள​னர்.​
    ​ அவர்​க​ளி​டம்,​​ கரு​மத்​தம்​பட்டி டி.எஸ்.பி.​ டாஸ்​மாக் மண்​டல மேலா​ளர்,​​ மாவட்ட மேலா​ளர் உள்​ளிட்ட அதி​கா​ரி​கள் சம​ர​சப் பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​ட​னர்.​ மது​பா​னக் கடையை இந்​தப் பகு​தி​யில் திறக்​க​வி​ட​மாட்​டோம் எனக் கூறி,​​ தொடர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​ற​னர்.​ போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ள​வர்​க​ளுக்கு அப்​ப​கு​தி​யி​லேயே உண​வும் தயா​ரித்து வழங்​கப்​ப​டு​கி​றது.​ இரவு முழு​வ​தும் ஆண்​கள் மட்​டும் கடை முன்​பாக அமர்ந்து தொடர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​ இதை​ய​டுத்து வியா​ழக்​கி​ழமை காலை​யில் பெண்​கள் கடை முன்​பாக அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​ இந்​நி​லை​யில்,​​ அதி​கா​ரி​கள் யாரும் பேச்​சு​வார்த்​தைக்கு வரா​த​தால்,​​ வெள்​ளிக்​கி​ழ​மை​யும் தொடர்ந்து 3-ஆவது நாளாக பெண்​கள் கடை முன்​பாக மது​பாட்​டில்​களை வைத்து ஒப்​பா​ரிப் பேராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​
    டாஸ்​மாக் மதுக் கடை​களை அகற்​றக் கோரி மனு... இது​கு​றித்து பொள்​ளாச்சி,​​ வேட்​டைக்​கா​ரன்​பு​தூர் ஊர்​மக்​கள் சார்​பில் ஆட்​சி​யர் த.ந.ஹரி​ஹ​ர​னி​டம் அளித்த மனு விவ​ரம்:​
    வேட்​டைக்​கா​ரன்​பு​தூ​ரில் ஸ்ரீஅ​ழுக்​கு​சா​மி​கள் கோயில் அமைந்​துள்​ளது.​ இதற்கு அருகே பெண்​கள் பொதுக் கழிப்​பி​டம் உள்​ளது.​ இங்​கி​ருந்து 5மீட்​டர் தொலை​வில் டாஸ்​மாக் கடை அமைந்​துள்​ளது.​ டாஸ்​மாக் கடையை அகற்​றக் கோரி பொது​மக்​கள் அமை​தி​யான முறை​யில் போராடி வரு​கி​றோம்.​ மேலும்,​​ கிராம நிர்​வாக அலு​வ​ல​கம்,​​ அரசு மருத்​து​வ​மனை,​​ கலா மண்​ட​பம் ​(பொது அரங்​கம்)​,​​ அரசு நூல​கம்,​​ பேருந்து நிறுத்​தம்,​​ மயா​னம் ஆகிய பகு​தி​க​ளில் இருந்து சில மீட்​டர் தொலை​வில் அமைந்​துள்ள டாஸ்​மாக் கடை​களை அகற்ற வேண்​டும் என மனு​வில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai