Enable Javscript for better performance
4.5 கிலோ நகை கொள்ளை வழக்​கில் ​நகை​களை மீட்​ப​தில் சிக்​கல் நீடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    4.5 கிலோ நகை கொள்ளை வழக்​கில் ​ நகை​களை மீட்​ப​தில் சிக்​கல் நீடிப்பு

    By DIN  |   Published on : 08th April 2017 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை நகைக் கடை​யில் 4.5 கிலோ நகை​க​ளைக் கொள்ளை அடித்​துச் சென்ற மூவர் காவல் துறை​யி​ன​ரி​டம் வியா​ழக்​கி​ழமை சிக்​கி​னர்.​ எனி​னும்,​​ அவர்களிடமிருந்து 1.4 கிலோ நகை​களை மட்​டுமே கைப்​பற்​றி​யுள்​ள​தால் மீத​முள்ள 3 கிலோ நகை​களை மீட்​ப​தில் சிக்​கல் நீடித்து வரு​கி​றது.​ ​ ​
    கோவை,​​ ராஜ​வீ​தி​யில் சந்​தி​ர​சே​கர் ​(47) என்​ப​வ​ரது நகைக் கடை உள்​ளது.​ இவ​ரி​டம் கார் ஓட்​டு​ந​ரா​கப் பணி​பு​ரிந்த,​​ கோவை,​​ உக்​க​டத்​தைச் சேர்ந்த ரியா​சு​தீன் உள்​ளிட்ட மூவர் கடந்த மார்ச் 2-ஆம் தேதி கடைக்​குள் புகுந்து சுமார் 4.5 கிலோ நகை​க​ளைக் கொள்​ளை​ய​டித்​துச் சென்​ற​னர்.​ ​ இது தொடர்​பாக நான்கு தனிப்​ப​டை​கள் அமைக்​கப்​பட்டு காவல் துறை​யி​னர் தீவிர விசா​ரணை நடத்தி வந்​த​னர்.​ இதில் ரியா​சு​தீ​னின் நண்​பர்​க​ளான அசா​ரு​தீன்,​​ விஜ​ய​கு​மார் ஆகி​யோ​ருக்​கும் தொடர்பு இருப்​பது தெரி​ய​வந்​தது.​ ​ இந்​நி​லை​யில்,​​ கர்​நா​டக மாநி​லம்,​​ பெங்​க​ளூ​ரில் இருந்து தமி​ழ​கம் நோக்கி வியா​ழக்​கி​ழமை வந்த கர்​நா​டக அர​சுப் பேருந்தை,​​ எல்​லைப் பகு​தி​யான ஆச​னூர் மது​வி​லக்கு சோத​னைச் சாவ​டி​யில் நிறுத்தி காவல் துறை​யி​னர் சோதனை நடத்​தி​னர்.​ இதில்,​​ நகை​களை மறைத்து வைத்​தி​ருந்த 3 பேரைப் பிடித்து விசா​ரணை நடத்​தி​னர்.​
    அவர்​கள் மூவ​ரும் கோவை நகைக்​கடை கொள்ளை வழக்​கில் தேடப்​பட்டு வரும் அசா​ரு​தீன்,​​ ரியா​சு​தீன்,​​ விஜ​ய​கு​மார் என்​பது விசா​ர​ணை​யில் தெரி​ய​வந்​தது.​ அவர்​க​ளி​ட​மி​ருந்து 178 பவுன் ​(சுமார் 1.4 கிலோ)​ நகை​களை பறி​மு​தல் செய்​த​னர்.​ பறி​மு​தல் செய்த நகை​க​ளு​டன்,​​ பிடி​பட்ட மூவ​ரும் கோவை மாந​கர காவல் துறை​யி​ன​ரி​டம் வியா​ழக்​கி​ழமை இரவு ஒப்​ப​டைக்​கப்​பட்​ட​னர்.​ அவர்​களை கோவைக்கு அழைத்து வந்த மாந​கர காவல்​து​றை​யி​னர் வெள்​ளிக்​கி​ழமை விசா​ரணை நடத்​தி​னர்.​ ​
    1.5 கிலோ மட்​டுமே கொள்ளை?​ நகைக் கடை​யில் 1.5 கிலோ மட்​டுமே கொள்ளை அடித்​த​தாக காவல் துறை​யி​ன​ரி​டம் மூவ​ரும் தெரி​வித்​துள்​ள​னர்.​ ஆனால்,​​ 4.5 கிலோ நகை​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​ட​தாக கடை உரி​மை​யா​ளர் புகார் அளித்​துள்​ளார்.​ ​ இம்​மூ​வ​ரும் கோவை​யில் பதுங்​கி​யி​ருந்​த​போது நகை​களை அட​மா​னம் வைத்​தும்,​​ விற்​றும் ஆடம்​ப​ர​மா​கச் செலவு செய்​துள்​ள​னர்.​ எனவே,​​ மீத​முள்ள நகை​க​ளைப் பதுக்கி வைத்​து​விட்டு அவர்​கள் நாட​க​மா​டு​கின்​ற​னரா என்​பது குறித்து காவல் துறை​யி​னர் விசா​ரணை நடத்தி வரு​கின்​ற​னர்.​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai