Enable Javscript for better performance
கடன் தள்ளுபடி குறித்து கருத்துக் கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    கடன் தள்ளுபடி குறித்து கருத்துக் கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

    By DIN  |   Published on : 09th April 2017 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கூடாது என்று கருத்துத் தெரிவித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் வ.து.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பொதுச் செயலர் பி.கந்தசாமி முன்னிலை வகித்தார். செயலர் எம்.செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    இதில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறிய அளவில் வறட்சி நிவாரணம் வழங்கிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், கடந்த ஆண்டு கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்ததில் சிறு, பெரு விவசாயி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஒட்டுமொத்த விவசாய சமூகத்தின் போராட்டமாகக் கருதி, மத்திய, மாநில அரசுகள் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஏப்ரல் 12-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
    ரசாயன பூச்சிக்கொல்லிகளை, ரசாயனமற்றவை என்று ஏமாற்றி விற்பனை செய்வதைத் தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யக் கூடாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. நுகர்வோருக்கு குறைந்த விலையில் வேளாண் பொருள்களை வழங்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கும்
    வரையிலும் கடன் தள்ளுபடி அவசியமானது என்பதை ஆளுநருக்கு தெரிவித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai