Enable Javscript for better performance
நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி

    By DIN  |   Published on : 09th April 2017 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து படித்த, படிப்பைத் தொடர முடியாத இளைஞர்கள், பெண்கள் பயனடையும் வகையில் இலவச தொழிற்பயிற்சி அளித்து வருகிறது.
    பயிற்சி குறித்த விவரங்கள்... வீட்டு ஒயரிங் 6 மாதம், வீட்டு உபயோகப்பொருட்களைப் பழுதுபார்த்தல் 2 வாரம், ஜெனரல் மெஷினிஸ்ட் 6 மாதம், குளிர்சாதனம், காற்று சீராக்கியை பழுதுபார்த்தல் 6 மாதம், ஸ்கீரின் பிரிண்டிங் ஒரு மாதம், தொலைக்காட்சிப் பெட்டி பழுது பார்த்தல் 6 மாதம், கணிப்பொறி அடிப்படைப் பயிற்சி 6 மாதம், டிடிபி பயிற்சி 6 மாதம், இரண்டு சக்கர வாகனம் பழுதுபார்த்தல் 6 மாதம், சிஎன்சி புரோகிராமிங் 6 மாதம், கட்டிங் அன் டெய்லரிங் 5 மாதம், சணல் பைகள் தயாரித்தல் ஒரு மாதம், மெதுபொம்மைகள் தயாரித்தல் 2 வாரம், எம்ப்ராய்டரிங் ஒரு மாதம், கயிறு, கால் மிதியடி தயாரித்தல் ஒரு மாதம், காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு ஒரு மாதம், தட்டச்சு 6 மாதம், பால் பதப்படுத்துதல் தொழில்நுட்பம் 6 மாதம், காய்கறிகள், பழங்களைப் பதப்படுத்துதல் பயிற்சி ஒரு வாரம் என இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் சேர தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது.இப்பயிற்சிகளில் சேர விரும்புவோர், நாச்சிமுத்து பாலிடெக்னிக் சமுதாய மேம்பாட்டுத் திட்ட ஆலோசகரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு 98659-07649, 99429-08419 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
    இந்தத் தகவலை என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai