Enable Javscript for better performance
பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களைக் கொண்டு வர எதிர்ப்புத் தெரிவித்து, கோவையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர்கள் 13 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    மத்திய பாஜக அரசு, தமிழக விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ ஆகிய திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிப்பதாகவும், புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழ் இளைஞர்கள் அமைப்பு அறிவித்திருந்தது. இதையடுத்து பாஜக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
    இந்நிலையில், காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் பகுதியில், ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கூடிய 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அவர்களை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் தடுத்து, கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai