மக்கள் நீதிமன்றம்: 573 வழக்குகளுக்குத் தீர்வு
By DIN | Published on : 09th April 2017 03:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலமாக 573 வழக்குகளுக்கு சனிக்கிழமை சமரசத் தீர்வு காணப்பட்டது.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட அமர்வு நீதிபதியுமான ஆர்.பொங்கியப்பன் தலைமையில், செயலாளர் ஜான்மினோ முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில், நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சொத்து வழக்குகள், தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள், குடும்ப வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வழக்குகள் என மொத்தம் 1,708 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில், 573 வழக்குகளுக்கு சமரசத் தீர்வுகாணப்பட்டு,மொத்தம் ரூ.11 கோடியே 47 லட்சம் தீர்வுக் தொகையாக வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் எஸ்.ஏ.ஸ்ரீராமுலு, தண்டபாணி, எ.நூர் அகமது,ஆர்.பிரேம்குமார், வி.ராமசாமி, வழக்குரைஞர்கள் மூலமாக இவ்வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.
வால்பாறையில்... வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலமாக 85 வழக்குகளுக்குத் தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வால்பாறை நீதிமன்றத்தில், மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. நீதிபதி வி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 130 வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 85 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் ரூ. 84 ஆயிரம் வசூலிக்கப்பட்டுளளன. வழக்குரைஞர்கள் விஸ்வநாதன், பெருமாள், பால்பாண்டி, வினோத்குமார், தன்னார்வலர்கள் சுரேஷ், முனியான்டி பரமசிவம், கணேஷ் உள்ளிட்டோர் இந்த முகாமில் பங்கேற்றனர்.