Enable Javscript for better performance
மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியல், முற்றுகைப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியல், முற்றுகைப் போராட்டம்

    By DIN  |   Published on : 09th April 2017 04:16 AM  |   அ+அ அ-   |    |  

    துடியலூர் அருகே பாப்பநாயக்கன்பாளையத்தில் புதிதாக மதுக் கடை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
    துடியலூர் பகுதிகளில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகளை அருகில் உள்ள கிராமங்களுக்கு இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
    பாப்பநாயக்கன்பாளையத்தில் ஏற்கெனவே டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் மேலும் ஒரு மதுக் கடையைத் திறக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள், துடியலூர்-சின்னத்தடாகம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    அவர்களிடம், துடியலூர் காவல் ஆய்வாளர் வெற்றிவேந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பொதுமக்கள் சமாதானமடையாமல் மறியலைத் தொடர்ந்தனர். இந்நிலையில், அங்கு வந்த கோவை வடக்கு கோட்டாட்சியர் சின்னசாமி, வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுக் கடை அமைப்பதற்கான நடவடிக்கை நிறுத்தப்படும் என உறுதி அளித்தனர். அதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நெகமத்தில் முற்றுகைப் போராட்டம்... நெகமம் கேவிகே நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதை அறிந்ததும் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் அங்கு சென்று, மதுக் கடையை உடனடியாக மூடக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதுக் கடையை ஊழியர்கள் மூடிவிட்டுச் சென்றனர்.
    வேட்டைக்காரன்புதூரில் போராட்டம்...: வேட்டைக்காரன்புதூர் பகுதியில் நெடுஞ்சாலை அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி இரண்டு நாள்களுக்கு முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
    இந்நிலையில், அந்த மதுக் கடை மீண்டும் திறக்கப்படுவதாகத் தகவல் பரவியது. அதையடுத்து, 75-க்கும் மேற்பட்டோர் அந்தக் கடையை சனிக்கிழமை முற்றுகையிட்டனர். இதனால், அந்த மதுக் கடை திறக்கப்படவில்லை.
    கரியாஞ்செட்டிபாளையம் கிராம மக்கள் மறியல்...: இந்த ஊருக்குள் டாஸ்மாக் மதுக் கடை அமைக்க இருப்பதாகத் தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள், பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கரியாஞ்செட்டிபாளையம் பிரிவில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீஸார் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மதுக் கடை அமைக்கப்படமாட்டாது என உறுதி அளித்தனர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp