Enable Javscript for better performance
மனித-விலங்கு மோதல்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் வனச் சரகத்தில் மனித-விலங்கு மோதல் குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவ, மாணவியருக்கு வனத் துறை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    மனித-விலங்கு மோதல் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் வனத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, பள்ளி மாணவ, மாணவியரை வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    மேட்டுப்பாளையம் வனச் சரகர் நசீர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் துடியலூர் அருகேயுள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ,மாணவியர் பங்கேற்றனர். யானைகள் வனத்தை விட்டு வெளியேறும் பகுதிகள், வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டிகள், செயற்கைக் குட்டைகள் ஆகியவற்றை மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர். வன விலங்குகள் ஊருக்குள் புகுந்துவிட்டால், பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு வனத் துறையினர் விளக்கினர். இதற்காக, வனத் துறையினரை உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய முறை குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இதில், இயற்கை ஆர்வலர் ஜலால், தனியார் பள்ளி ஆசிரியர் ரேவதி
    தலைமையில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai