Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்டம், பேரூர் அருகே மின்சாரம் பாய்ந்த விபத்தில் விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
    கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (62). இவர் பேரூர் அருகே உள்ள தெலுங்குபாளையத்தில் சேத்துமாவாய்க்கால், சி.ஜி.வி. காலனியில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு, வியாழக்கிழமை இரவு 10 மணிக்குத் தோட்டத்துக்கு திரும்பியுள்ளார். அந்த நேரத்தில மழை பெய்ததால், அங்கு இருந்த தகர கொட்டகையைப் பூட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, மின்கசிவு ஏற்பட்டு தகரக் கொட்டகையில் பரவியதால், பரமசிவத்தின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
    இதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேரூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai