Enable Javscript for better performance
ரூ.7.37 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாநகராட்சி மூலமாக ரூ.7.37 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
    இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி:
    கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் ரூ.26.2 கோடி மதிப்பிலான 2.72 ஏக்கர் நிலமும், பிப்ரவரியில் ரூ.71.95 கோடி மதிப்பிலான 7.66 ஏக்கர் நிலமும் மீட்கப்பட்டன. அந்த இடங்களில் மாநகராட்சி சார்பில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து மார்ச்சில் ரூ.15.86 கோடி மதிப்பிலான 2.45 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன.
    இந்நிலையில், மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட சங்கனூர், நல்லாம்பாளையம் சாலை வார்டு எண் 45-இல் சுமார் ரூ.1.37 கோடி மதிப்பிலான 31.56 சென்ட் இடமும், மேற்கு மண்டலம் வீரகேரளத்தில் வார்டு 18இல் ரூ.6 கோடி மதிப்பிலான 47 சென்ட் இடமும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டன. அந்த இடங்களில் இருந்த சீமைக் கருவேல மரங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இந்த இடங்கள் மாநகராட்சிக்குச் சொந்தமானவை என்ற அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai