Enable Javscript for better performance
ரேஷன் கடை குளறுபடிகளைக் கண்டித்து 24-இல் போராட்டம்: மாதர் சங்கம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் கடை குளறுபடிகளைக் கண்டித்து 24-இல் போராட்டம்: மாதர் சங்கம் அறிவிப்பு

    By DIN  |   Published on : 09th April 2017 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் ரேஷன் கடைகளில் நிலவும் குளறுபடிகளைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை ஏப்ரல் 24-ஆம் தேதி முற்றுகையிட்டப் போவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முடிவு செய்துள்ளது.
    இது குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலர் ஏ.ராதிகா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
    எங்களது சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் குழுவுக்கு தலா 5 பேர் வீதம் 42 குழுக்கள் அமைக்கப்பட்டு, 42 ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
    இந்த ஆய்வின் மூலமாக, ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள், குளறுபடிகள் இருப்பது தெரிய வந்துள்ளன. கடந்த 3 மாதங்களாக பருப்பு, பாமாயில், உளுந்து போன்றவை வழங்கப்படுவதில்லை. அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படாத நிலையில், அந்த அட்டை இல்லையென்றால் பொருள்கள் வழங்கப்படுதில்லை.
    கோதுமை வழங்கப்படுவதில்லை. மண்ணெண்ணெய் விநியோகத்தில் பல குளறுபடிகள் உள்ளன. இலவச அரிசி பெரும்பாலும் வெளிச் சந்தையில்தான் விற்கப்படுகிறது.சோப்பு, உப்பு, மசாலாப் பொருள்களை வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். பெரும்பாலான ரேஷன் கடைகள், காலை 9 முதல் மாலை 6 மணி வரை இயங்காமல், பிற்பகல் 2 மணிக்குள்ளாகவே மூடப்படுகின்றன. கடை ஊழியரே, தனக்கு உதவியாளரை நியமித்துக் கொள்கிறார். அவருக்கு ஊதியம் வழங்குவதற்காக பொருள்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. எனவே, இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள், குளறுபடிகளைத் தீர்க்க வலியுறுத்தியும், மக்களுக்கு அனைத்துப் பொருள்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியும் வரும் 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
    சங்கத்தின் மாவட்டத் தலைவர் அமுதா, நிர்வாகிகள் சாந்தா, பங்கஜவல்லி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai