Enable Javscript for better performance
விபத்தில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை, பீளமேடு அருகே ரோடுரோலர் மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    கோவை, ரத்தினபுரியைச் சேர்ந்தவர் ராமமோகன் (24). இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், ராமமோகன், அவரது நண்பர் சுதீஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அவிநாசி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பீளமேடு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரோடுரோலர் மீது இந்த இருசக்கர வாகனம் மோதியது.
    இந்த விபத்தில் ராமமோகன் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சுதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வு கிழக்குப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai