Enable Javscript for better performance
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு விளையாட்டு விடுதிகளில் 2017-18ஆம் ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    தமிழ அரசின் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிய பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள்,பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் உள்ளன.
    ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோயில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் 7-9ஆம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புக்கான சேர்க்கைக்கு மாவட்ட அளவிலான தேர்வு மே 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
    விளையாட்டுகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அதற்கான உரிய படிவங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    இது தவிர 2017-18ஆம் ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai