Enable Javscript for better performance
கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் கருட சேவை- Dinamani

சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. அன்னவாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்திலும், சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்திலும்,
    முத்துப்பந்தலில் காளிங்கநர்த்தன அலங்காரத்திலும், அனுமந்த வாகனத்தில் ராமர் அலங்காரத்திலும் கரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவையின்போது பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. பின்னர் கரிவரதராஜப் பெருமாள் வைரமுடி சேவையுடன் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அப்போது, ராமனுஜருக்கு எதிர்சேவை சாதித்து மங்களாசாசனம் செய்துவைத்தார். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலாவும் நடைபெற்றன. இதில், கரிவரதராஜப் பெருமாள் பஜனை கோஷ்டியினர், ஆண்டாள், பாலர், பாகவத கோஷ்டியினர் உள்ளிட்டோர் பிருந்தாவனப் பாடல்களைப் பாடி, ஆடியவாறு வந்தனர். அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai