Enable Javscript for better performance
காப்பகத்தில் வார்டனை தாக்கிவிட்டு 5 பெண்கள் தப்பி ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காப்பகத்தில் வார்டனை தாக்கிவிட்டு 5 பெண்கள் தப்பி ஓட்டம்

    By DIN  |   Published on : 10th April 2017 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அரசு பெண்கள் காப்பகத்தில் தங்கி இருந்த 5 பெண்கள் வார்டனை தாக்கிவிட்டு சனிக்கிழமை இரவு தப்பிச் சென்றனர்.
    கோவை, சங்கனூர் சாலையில் அரசு பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட முடியாத பெண்கள் இங்கு அடைக்கப்படுவது வழக்கம். அவர்களைக் கண்காணிக்க வார்டன் மற்றும் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இங்கு 9 பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அறையில் தங்கியிருந்த 5 பெண்கள் சனிக்கிழமை இரவு திடீரென வார்டனை தாக்கிவிட்டு சாவியைப் பறித்துள்ளனர். பின்னர், வார்டன் அறையில் இருந்த ரூ.5 ஆயிரம், 2 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் துடியலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai